திருச்சி ஐ எம் ஏ ஹாலில் முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இன்று சனிக்கிழமை திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கமும் தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி பயிற்சி குறித்து ஒரு நாள் கருத்தரங்க நடத்தப்பட்டது.
முதலுதவி மற்றும் பாதுகாப்பு பயிற்சி மற்றும் தொழிற்சாலைகளில் சட்டத்தின் கீழ் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் திருச்சி மண்டல கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்.
நெய்வேலி லிக்னைட கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயராஜ் சிறப்புரையாற்றினார். டெவலப்மென்ட்
இயக்குனர் டாக்டர் சுகன் வரவேற்புரை ஆற்றினார்.
டாக்டர் அசோக் பாண்டியன் விளையாட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சான்றளிக்கும் மருத்துவர் டாக்டர் மதுசூதனன் டி என் பி எல் நிறுவனத்தின் டாக்டர் ராஜா,
பி எச் எல் நிறுவனத்தின் டாக்டர் ராஜ்குமார், பாரத் லிமிடெட் இன் ஜெனரல் மேனேஜர் சேஃப்டி துரைராஜ், என்எல்சி நிறுவனத்தின் டாக்டர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், ஆத்மா ஹாஸ்பிடல் திருச்சி மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ராமகிருஷ்ணன், நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் டாக்டர் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி, சதர்ன் ரயில்வே சென்ட்ரல் ஒர்க் ஷாப் சீப் சேஃப்டி ஆபீஸர் டாக்டர் கே எஸ் நாராயணன், அசிஸ்டன்ட் டிஸ்ட்ரிக்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை திருச்சி மாவட்ட அலுவலர்
தலியோ ஜோசப்
ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சாலைகளில் சட்டம் மற்றும் இதர தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் கடைபிடிக்க வேண்டிய முதலுதவி மற்றும் உடல்நலம் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து அளிக்க வேண்டிய வழிமுறைகள், பயிற்சி அளிக்க வேண்டிய வழிமுறைகள் அதற்கு மற்றும் ஆபத்தான தொழிற்சாலைகளை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள் மேற்படி பயிற்சிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ ஆர் வி ஆர் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் தீராத நோய்கள் தடுக்கும் வழிமுறைகள், தொழிற்சாலைகளை பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது .
திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர்கள் புகழேந்தி, மாலதி, விமலா, சித்ரா மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விரைவாக அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் மேலாளர் நன்றியுரை வழங்கி நன்றியுரை வழங்கினார்.
தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் சுகாதார நலன் (TN ASDC H ) மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம்( DISH ) (சென்னை) சார்பில் திருச்சி ஐஎம்ஏ ஹாலில் நடந்தது.
இதில் செயல்பாட்டுத் தலைவர் பயிற்சி மற்றும் நிர்வாகம் டாக்டர் சுகன் சின்ன மாறன், வரவேற்புரை வழங்கினார். இதில் தொழில் மற்றும் தொழில் சார்ந்து வரக்கூடிய பாதுகாப்புக்கு தேவையான முதல் உதவிப் பயிற்சி ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. .
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் , மற்றும் கொள்வர் விருந்தினர்களாக தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், நெய்வேலி நிலக்கரி சுரங்க முன்னாள் முதன்மை இயக்குநர்,ஜி.
ஜெயராஜ், ஆகியோர் கலந்து முதலுதவியின் முக்கியத்துவத்தை மற்றும் வேலை செய்யும் இடத்தில் பாதிப்புகளை கலைவதற்கு தேவையான பாதுகாப்பு பயிற்சியையும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு தேவையான கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கேட்கப்பட்ட மருத்துவ கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் 250 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
திட்ட ஆலோசகர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம், முடிவில் பயிற்சி மற்றும் நிர்வாக மேலாளர் லெனின் பயஸ் நன்றி கூறினார்.