Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விபச்சாரத்துக்கு மட்டும்தான் இன்னும் ஜிஎஸ்டி விதிக்கவில்லை மாநிலத் துணைத் தலைவர் கந்தன் .

0

 

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து
இன்று ஆர்ப்பாட்டம்.


மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து
திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடந்தது.

திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நாள் துவங்கி தற்போது வரை பல்வேறு குழப்பங்களுடனே இச்சட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இதனை மெய்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் துவங்கி தற்போது வரை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றன.
ஆடிட்டிங் படித்த கணக்காளரும், கம்ப்யூட்டரும் இல்லாமல் ஜி.எஸ். டி.ஐ பராமரிக்க முடியாது என்பது ஜி.எஸ்.டி.யின் சாதனைகளில் ஒன்று. இச் சூழ்நிலையில் எவை எவற்றிற்கெல்லாம் வரி இல்லை, அல்லது குறைவாக இருக்கிறது என்பதை தேடித் தேடி வரி விதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகையுடன் கூடுதலாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து செலுத்த வேண்டும் எனவும், இது 10.10.24 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிகர்களில் 90 சதவீதம் பேர் வாடகை கட்டிடத்தில் தான் வணிகம் செய்து வருகின்றார். இந்நிலையில் மத்திய அரசின் இவ்அறிவிப்பு மிகப்பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் இவ் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வாடகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையாக எதிர்கின்றது. வணிகர்களின் எதிர்ப்பு குரலுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க தவறியதால் பேரமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் இன்று (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே எனது ( மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு ) தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடகைக்கு ஜி.எஸ்.டி. என்று வணிகர்களை வாட்டி வதைக்கும் இவ் அறிவிப்பை திரும்ப பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வியாபாரிகளை திரட்டி மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கோவிந்தராஜுலு கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாநில துணைத்தலைவர்கள் எஸ்.கந்தன்,
கே எம் எஸ் ஹக்கீம், ரங்கநாதன்,
தொட்டியம் செல்வராஜ்,
மாநில இணை செயலாளர்கள் கமலக்கண்ணன்,
ஸ்ரீ ராமகுமார், ராஜாங்கம், திருப்பதி,திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் பாலு ,திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்காய மண்டி தங்கராஜ்,மாநகர செயலாளர் ஏ ஒன் ஹோட்டல் ஆறுமுகப்பெருமாள்,மாநகரப் பொருளாளர் ஜானகிராமன்,
திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளார் கார்த்திக், பொருளாளர் பிரசன்னன்,
,திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கே. எம் .எஸ் மைதீன்,செயலாளர் செய்தி தொடர்பாளர் திருமாவளவன்,பொருளாளர் அப்பாத்துரை,
டோல்கேட் ரமேஷ்,மற்றும் தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு, மளிகை மண்டி சங்கம் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் மருந்து வணிகர்கள் சங்கம்,எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம், ஜுவல்லரி அசோசியேசன்,டெக்ஸ்டைல் அசோசியேசன் மற்றும்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, மாநகர இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட இணைச்செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கிளைச்சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் எஸ்.கந்தன் பேசிய போது : தற்போது மத்திய அரசின் ஜி எஸ் டி யால் வணிகர்கள் அனைவரும் பெரும் வேதனை உடன் வெறும் கோமணத்துடன் உள்ள நிலையில் உள்ளனர் .

மேலும் மேலும் ஜிஎஸ்டி விதித்து வணிகர்களை வேதனைக்கு உள்ளாக்காதீர் . அனைத்துக்கும் ஜிஎஸ்டி . வாடகைக்கும் ஜிஎஸ்டியா ? பெண்கள் செய்யும் விபச்சாரத்திற்கு மட்டும்தான் ஜிஎஸ்டி விதிக்கவில்லை என காட்டமாக பேசினார் .

Leave A Reply

Your email address will not be published.