வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞரை நேரில் அழைத்து விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பெயிண்டரிடம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மிரட்டி எழுதி வாங்கிக் கொண்ட திருச்சி தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கணேசமூர்த்தி என்பவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்று அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தினகூலி பெயிண்ட்ராக வேலை செய்து வரும் நான் வழக்கறிஞர் கபீர் கான் எனக்கு பல நீதிபதிகளை தெரியும் எனவே உன் மனைவிக்கு நீதிமன்றத்தில்வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி அதற்காக ரூ. இரண்டு லட்சம் பணமும் வாங்கிக் கொண்டார் .
மேலும் எனது வங்கிக் கணக்கில் எனது ஆதார் கார்டு வைத்து தான் தவணை கட்டுவதாக கூறி செல்போன் ஒன்றும் வாங்கி கொண்டார் . அதன் பணமும் கபிர்கான் கட்டாமல் நான் கட்டி வருகிறேன் .
நான் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எனது பணத்தை திருப்பித் தர மறுக்கிறார் .
இது சம்பந்தமாக 28.8.2024 அன்று திருச்சி மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்தேன் . அந்த மனு மீது திருச்சி தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய மனு ரசீது பெற்றேன் . (எண் 353/2024).
ஆனால் தில்லைநகர் காவல் நிலையத்தில் எதிர்மனுதாரரை ஒரு முறை கூட நேரில் அழைத்து விசாரிக்காமல் குற்றப்பிரிவு காவலர் ராஜராஜன் என்பவர் என்னை கட்டாயப்படுத்தி கமிஷனர் பெட்டிசன் உடனே முடிக்க வேண்டும் அதனால் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு பதிந்து பார்த்துக்கொள் என கூறிவிட்டார் .
பணத்தை இழந்து. தில்லை நகர் குற்றப்பிரிவு காவல் துறையினரால் மிகுந்த மன உளைச்சலில் உள்ள எனக்கு ஐயா அவர்கள் இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தர வேண்டுகிறேன் என கணேசமூர்த்தி அம்மனுவில் கூறியுள்ளார் .