திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ, படங்கள் வெளியாகி 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை .
திருச்சி கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை .
தற்போது திருச்சி மாநகர் முழுவதும் செயின், செல்போன் பறிப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களை குறைக்க மாநகர ஆணையர் காமினி கடும் நடவடிக்கை எடுத்து வரும் வேலையிலும் தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்று வருவது ஏன் என்பது தெரியவில்லை .
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரிய கடை வீதி ராணி தெருவில் செல்போன் வழிப்பறி நபர்களின் வீடியோ மட்டும் படங்கள் வெளியாகி உள்ளது .
இதுகுறித்து நேற்று திருச்சி தகவல் தொழில் நுட்பபிரிவை சேர்ந்த கார்த்தி என்பவர்
5.12.24 அன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பிய நேரத்தில் அடுத்த நாளே 6.12.2024 இரவு சுமார் 8 மணி அளவில் ராணி தெரு அரசமரம் அருகில் இரண்டு நபர்களை ( ராஜன் , சேது ) மூவர் சேர்ந்த கத்தியை காட்டி மிரட்டியும் சிறிது தூரம் சென்றதும் அவ்வழியே வந்த சங்கீத் கேபிள் வசூல் செய்யும் கஸ்பார் என்பவரின் மகன் பாபு என்பவரிடம் இருந்து அவருடைய செல்போனை புடுங்கி சென்றுள்ளார்கள். அவருடைய செல்போன் நம்பர் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இம்மாதிரி சம்பவம் நடைபெறுவதால் இங்கு உள்ள நடுத்தர பொருளாதாரம் வசதி கொண்ட பொது மக்கள் மிகவும் அதிர்ச்சியும் பாதுகாப்பு இன்மையும் கண்டு அதேசமயம் கோபமும் கொண்டு வெகு விரைவில் ஒருங்கிணைந்து போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். மேற்படி நேரத்தில் நானும் இந்த களத்தில் அவர்களோடு மக்கள் பிரச்சனைக்கு இணைந்து போராட உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.