Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: உதயநிதி ஸ்டாலின் குறித்த நடிகர் விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சரியான பதிலடி .

0

திருச்சி:
சம்பிரதாயத்திற்காக வெள்ள பாதிப்பு பகுதியில் இருந்து போட்டோ எடுத்து வலைதளத்தில் விடுவதாக விஜய் பேசியது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அறியும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு. பொதுமக்களிடம் மனுக்களை பெரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் வீட்டுமனை பட்டா வேண்டியும் மகளிர் உதவித்தொகை ஆயிரம் வேண்டியும் சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டுமென மனு அளித்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் பொதுமக்களிடம் பொறுமையாக அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி செய்து தர அறிவுறுத்தினார்.

இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பிரதாயத்திற்காக மழை வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகளில் நின்று போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கின்றார் என்று விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு
தளத்தில் யார் வேலை பார்க்கிறார் களத்தில் யார் வேலை பார்க்கிறார் என்பது குறித்து தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் வெறும் சமூக வலைதளத்தில் பணியாற்றுவதை காட்டிலும் களத்தில் பணியாற்றி பார்த்தால் தான் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பது தெரியும்.

முதல்வர் அவர்கள் சிறுமழை, வெள்ள பாதிப்பு என்றாலும் உடனடியாக மழைக்கோட் அணிந்து கொண்டு களத்திற்கு சென்று நிலவரத்தை கேட்டு அறிகிறார். அதே போல் துணை முதல்வரும் கடந்த மழை வெள்ள பாதிப்பு அன்று இரண்டு நாட்களில் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு சுமார் 2500 கிலோமீட்டர் பயணித்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.

எப்போதும் மக்களோடு மக்களாக நாங்கள் இருக்கிறோம் எங்களோடு மக்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.