Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டுவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் விழா தொடக்கம். 90% நிதி வசதியுடன் ஆக்டிவா இலவசமாக வழங்கப்பட உள்ளது. உரிமையாளர் பக்ருதீன் தகவல்.

0

 

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் டுவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா
எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற எக்ஸ்சேஞ்ச் மேல தொடக்க நாள் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரைப்பட நடிகை அஸ்மிதாசிங், திருச்சி மாநகராட்சி
மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு எக்ஸ்சேஞ்ச் மேளாவை தொடங்கி
லைத்து கார் ஷோருமை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த வாடிக்கையாளர்களை டுவின்ஸ் கார் ஷோரூம் உரிமையாளர் பக்ருதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜமால் முகமது
கல்லூரி செயலாளர் காஜா நஜிமுதீன், திருச்சி கார் அசோசியேசன் தலைவர் கே.ஜே.சுரேஷ் பாபு என்கிற ராஜா ஆகியோர் கலந்து
கொண்டனர்.

பின்னர்
வாடிக்கையாளர்கள் கார் ஷோரூமை பார்வையிட்டு
தங்களுக்கு விருப்பமான கார்களை தேர்வு செய்தனர்.

இது
குறித்து ஷோரூமின் உரிமையாளர் பக்ருதீன் கூறுகையில்:-
இந்த எக்ஸ்சேஞ்ச் மேளாவில்
வாடிக்கையாளர்கள் தங்கனது விருப்பமான கார்களை தேர்ந்தெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 சதவீத நிதி உதவி வழங் கப்படுகிறது. 6 மாத வாரண்டியும் அளிக்கப்படுகிறது. மேலும் ரூ.5 லட்சத்திற்குள் கார் வாங்குபவர்களுக்கு டைட்டன் வாட்ச், ரூ.5 லட்சத்திற்கு மேல் கார் வாங்குப்வர்களுக்கு சைக்கிள், ரூ.10 லட்சத்திற்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு தங்கநாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அடுத்த மாதம் (ஜனவரி) 1ந்தேதி குலுக்கல் முறையில் ஒருநபருக்கு ஹோண்டா ஆக்டிவா இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.