திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சியில்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சங்கர் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் அன்பழகன் உதயசூரியன்.
மாயவன்,சிவஸ்ரீ ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.
தொடக்க கல்வி துறையை சீரழிக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15 ந் தேதி மதுரையில் மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.