அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மக்கள் தமிழகம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மக்கள் தமிழகம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதே போல் மக்கள் தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மக்கள் தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஜெகன் அவர்களின் தந்தை மறைந்த ஈரா ஆறுமுகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சியும் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மக்கள் தமிழகம் கட்சியின் மாநில தலைவர் நிலவளவன், மாநில செயலாளர் செவ்வேல், தேவேந்திர குல கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஐயப்பன், சங்கர் மற்றும் மக்கள் தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஜெகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் புல்லட் லாரன்ஸ் , தமிழாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.