Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோயில் உண்டியல் பணம் என்னும் போது திருடிய பெண் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கைது. பெண் ஏட்டு சஸ்பெண்ட் .

0

 

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்..

இதில் 4 பேருமே பெண்கள் ஆவர்.. அதிலும் ஒருவர் பெண் போலீஸ் ஆவார்.. இப்போது இவர்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்து கோயில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்துமா இப்படியொரு நிலைமை? இந்த திருட்டுக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்து முன்னணி தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், உண்டியல் திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் குறையவில்லை.

அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு நிறைந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கடந்த வாரம் மிகப்பெரிய “இரும்பு உண்டியல்” கொள்ளையடிக்கப்பட்டது. அதிலும், சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வழிகளில் 3 இடங்களில் பக்தர்கள் அனைவருமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. இத்தனை பாதுகாப்பு இருந்தும், கேமரா இருந்தும், இந்த கொள்ளை நடந்திருக்கிறது.

தமிழகத்திலும் இதுபோன்ற உண்டியல் கொள்ளைகள் தொடர்கின்றன. தூத்துக்குடி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்கு பிறகுதான், உண்டியல் பணம் எண்ணப்படும். அப்போது, உண்டியல் எண்ணும் பணிகள் அனைத்தும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவிலும் பதிவு செய்யப்படும்.

அந்தவகையில், கடந்த வாரம் உண்டியலிலுள்ள பணத்தை, துணை ஆணையர் கோமதி முன்னிலையில் ஊழியர்கள் பலரும் எண்ணியிருக்கிறார்கள்.. அப்போது எல்லாரும் சேர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த 4 பெண்களுக்கு உண்டியல் பணத்தை பார்த்ததுமே சபலம் வந்துவிட்டது, இதனால், பணத்தை எண்ணுவது போல பாவ்லா செய்து, 17,710 ரூபாயை திருடிவிட்டார்கள்.

இந்த 4 பெண்கள் மீது, அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிறகு, கோயில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து, சந்தேகத்திற்கிடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மகளிர் போலீசாரும், அந்த பெண்களிடம் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அவர்கள் 4 பேரும் தாங்கள் உண்டியல் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்கள்.

அந்த 4 பேரில் ஒருவர் பெண் போலீஸ் என்பதை அறிந்து, மகளிர் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை திருடிய பெண் போலீஸ் பெயர் மகேஸ்வரி (வயது42 ) தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறாராம்.

சங்கரன்கோவில் கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) உட்பட, ஏட்டு மகேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இப்போது, கோயில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாராம்.

கோயில் உண்டியலில் ரூ.17,710 திருடியதாக மகேஸ்வரியுடன் மற்ற 3 பெண்களும் ஏற்கனவே கைதான நிலையில், தலைமைக் காவலர் மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தென்காசி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave A Reply

Your email address will not be published.