ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, திருச்சியில் வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உள்ளே இருந்தவர்கள் விரைவாக வெளியேறியதால் உயிர் சேதம் இல்லை.
ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகம் பகுதியில் ஆம்னி பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்துக்குள்ளேயை சமைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு பேருந்துக்குள் திடீரென தீப்பிடித்தது. பேருந்தில் கரும் புகை வந்ததும் பேருந்தில் இருந்த ஐயப்ப பக்தர்கள் கீழே இறங்கி விட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பின்னர் வழக்கம் போல் இயக்கப்பட்டது.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
கேரளா சபரிமலைக்கு சென்று விட்டு, திருச்சி வழியாக ஆந்திரா செல்ல விருந்து ஐயப்ப பயணிகள் தத்தம் உடமைகளை இழந்தும் பொருட்களை இழந்தும் சாலையில் தவித்து நின்றனர்.