நாளை ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாள். வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
அதிமுகவுக்கும் ,
தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான (நாளை)5.12.2024, வியாழக்கிழமை அன்று அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் கலந்து கொள்கிறார்.
5.12.2024, வியாழக்கிழமை காலை 9.00மணி: சோமரசம்பேட்டை
காலை 9.30மணி: குழு மணி
காலை 10.00மணி: ஜீயபுரம்
காலை 10.30மணி: முசிறி கைக்காட்டி
காலை 11.15 மணி: துறையூர்
மதியம் 12.00மணி: மண்ணச்சநல்லூர்
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .