திருச்சி சிவானந்தா பாலாலயா மாற்றுத்திறனாளி பள்ளி முதல்வர் காயத்ரியை பாராட்டிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. கலெக்டர் பரிசு வழங்கினார் .
உலக மாற்று திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருச்சி கலையரங்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி நகர அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.
விழாவில் எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்று திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும்,96 மாற்று திறனாளிகளுக்கு ரூபாய் 37 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக திருச்சி சீனிவாச நகர் சிவானந்தா பாலாலயா மாற்றுத்திறனாளி பள்ளி சேர்ந்த தலைமை ஆசிரியை பி. காயத்ரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமணி பாராட்டி பேசினார் .
பின்னர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்பட்டதாக திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் வாழ்த்து தெரிவித்து சிறப்பு பரிசும் வழங்கினார் .
முன்னதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசும் பொழுது திமுக அரசு பொறுப்பேற்ற காலம் முதல் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள், திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
குறிப்பாக சட்டமன்றத்தில் அதிக அளவு மாற்று திறனாளிகளுக்காக அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசி குரல் எழுப்பியவர் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினாகும்.
என்றைக்கும் இந்த அரசு,தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தனித்துறை ஆட்சியர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி கி. ஆ.பெ.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமரவேல், மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குனர் மகாராணி,மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, திட்ட அலுவலர் நித்தியா,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கலையரசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
முடிவில் மாவட்ட பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.