நாளை ஜெயலலிதாவின் நினைவு நாள்: மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின்உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள் .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளான 5.12.2024, வியாழக்கிழமை (நாளை)
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்.. காலை 8.30 மணிக்கு, பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு. மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து
லால்குடி சட்டமன்ற தொகுதியில், காலை 10.00 மணிக்கு லால்குடி ரவுண்டானா அருகிலும்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி காலை 11.30 மணியளவில், மணப்பாறை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட நிகழ்வுகளில் அதிமுகவின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அதிமுகவினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படங்களை வைத்து மாலை அணிவித்து, அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி நினைவஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.