Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பீமா ஜுவல்லரியில் 73 பவுன் எடை கொண்ட 585 தங்க நாணயங்களை ஆட்டைய போட்ட காசாளர் கைது.

0

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை பீமா ஜுவல்லரி .

இந்த நகை கடையில் ஏராளமான தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தது. யார் இவற்றை திருடினார்கள் என்பதை தெரியாமல் தவித்து போன கடை உரிமையாளர், உடனடியாக சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் திருடினார்கள் என்பதை தேடுமாறு மேலாளருக்கு உத்தரவிட்டார் .

மேலாளர் தீவிரமாக நடத்திய சோதனையில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீயா இப்படி செய்தாய் என்று அவர் அதனை பார்த்து ஆடிப்போனார்.

தங்கம் விலை என்பது கடந்த 2012ம் ஆண்டுகளில் எல்லாம் ஒரு பவுன் தங்கம் வெறும் 10 ஆயிரம் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் என்கிற அளவிலும், 2020ம் ஆண்டு வாக்கில் 35000 என்கிற அளவில் அதிரடியாக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளில் சுங்கவரி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தை மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் வேகமாக உயர்ந்து வந்தது. 2024ம் ஆண்டு தொடக்கத்தில் 50 ஆயிரம் என்கிற நிலையையும், இப்போது சுமார் 58,000 என்கிற அளவில் உயர்ந்துவிட்டது.

தங்கத்தை தற்போதைய நிலையில் வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தொகைகளை சேர்த்து பார்த்தால்,ஒரு பவுன் நகைக்கு கிட்டத்தட்ட கூடுதலாக 8 ஆயிரம் முதல் 1000 ரூபாய் வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டியது வரும். அதாவது ஒரு பவுன் தங்கம் 58000 ரூபாய் என்றால், கிட்டத்தட்ட 6700 ரூபாய் என்கிற அளவில் கட்ட வேண்டியதிருக்கும். இதனால் தங்க நகைகளை கடத்துவது மற்றும் திருடுவது போன்ற சம்பவங்கள் இப்போது மிக அதிக அளவில் நடக்கிறது.

தங்கம் ஒன்று மட்டுமே வாங்கிய மதிப்பில் 90 சதவீதம் பணத்தை உடனே வாங்கிவிட முடியும்.

அதனால் தங்கத்தை திருடுவதில் கொள்ளையர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கொள்ளையர்கள் மட்டுமல்ல, சாமானியர்கள், கடை ஊழியர்கள் என சபலப்பட்டு திருடுவது அடிக்கடி நடக்கிறது. அப்படி திருடி அசிங்கப்பட்டவர்கள் லிஸ்ட் மிகப்பெரியது. அப்படித்தான் திருச்சி சின்ன கடை வீதியில் ஏங்கி வரும் பீமா ஜுவல்லரி நகைக்கடையில் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி சின்னகடை வீதியில் பீமா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் திருச்சி உறையூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 46) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடையில் உள்ள நகைகளின் இருப்பு விவரங்களை கடந்த நவம்பர் 22-ந்தேதி வழக்கம் போல் சரிபார்த்தார்.

அப்போது, கடையில் இருந்த 73 பவுன் எடை கொண்ட 585 தங்க நாணயங்களின் இருப்பு குறைந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விசாரணை நடத்தினர்.

அப்போது, அதே கடையில் காசாளராக பணியாற்றி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தசரதன் (வயது 32) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ரவிக்குமார் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தசரதனை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.