சாக்சீடு குழந்தைகள் தத்துவள மையை தினத்தை முன்னிட்டு சாக்சீடு நிறுவனம் சார்பில் இயக்குனர் சகோதரி பரிமளா அவர்கள் தலைமையில் சாக்சீடு அரங்கில் நேற்று நடைபெற்றது .
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா அவர்கள் தலைமை தாங்கினார்.
குழந்தைகள் நல மருத்துவர் முத்துக்குமார் அவர்கள் குழந்தைகள் வளர்ப்புமுறை மற்றும் மனிதனின் குணாதிசயங்கள் சமூகத்தில் ஒரு பெற்றோர் எவ்வாறு குழந்தைகளை வளர்க் கவேண்டும் என்பது பற்றி சிறப்புரை யாற்றினார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் நேத்தலின் டேன் ஆப் பாப்பு அவர்களும் கலந்துகொண்டார்.
ஜெயராஜ் குழந்தைகள் தத்துவள மைய ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் தத்துவள மைய செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
மாம்பழசாலை ஹோலி கிராஸ் கன்வென்ட் தலைமை அன்னை சிறியபுஷ்பம் அவர்கள் மற்றும் புனித சிலுவை கல்லூரி மாற்று திறனாளிகள் சிறப்பு பள்ளியின் இயக்குனர் ஜோஸ்பின் அவர்களும் கலந்து கொண்டனர்.
குழந்தைகளை தத்தெடுத்து கொண்ட இரண்டு பெற்றோர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆர்.சி. நடு நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் சுமார் 50 பெற்றோர் மற்றும் 50 பயனாளிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ரெனில்டா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வாழங்கினார்.