பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் பெரியசாமியின் படத்திறப்பு விழா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .
பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் தி.மு.க. பிரமுகர் பெரியசாமியின் படத்திறப்பு விழா
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .
திருச்சி கொட்டப்பட்டு தி.மு.க. பிரமுகரும், இ.எம்.பி. லாரி சர்வீஸ் உரிமையாளருமான மறைந்த இ.எம். பெரியசாமி தெத்துவாண்டார்
படத்திறப்பு விழா நேற்று திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவில் உள்ள உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
மாநகர தி.மு.க.. செயலாளரும் மண்டல குழு தலைவருமான மு. மதிவாணன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மறைந்த இ.எம்.பெரியசாமியின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில்
பகுதி செயலாளர்கள் மணிவேல், சிவகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் பொற்கொடி, சீதாலட்சுமி முருகானந்தம், பியூலா மாணிக்கம் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மறைந்த இ.எம்.பெரியசாமியின் . மனைவியும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான பி. உஷாராணி, சகோதரரும் பொன்மலை பகுதி தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான இ. எம.தர்மராஜ், மாவட்ட தி.மு.க. பிரதிநிதியும் மகனுமான இ.எம்.பி. கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.