திருச்சி மாநகரில்
கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் கைது.
திருச்சி மாநகரம் திருவரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு, திருவரங்கம் சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கஞ்சா விற்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பாலக்கரை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக சதீஷ்குமார் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.