திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் “தமிழ்ப்பேச்சு எங்கள் உயிர் மூச்சு” டிவி புகழ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் நாகமுத்துப் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் தேசிய கல்லூரி பேராசிரியர் நீலகண்டன், எக்ஸ்னோரா காலாவதி சண்முகம், தியாகராஜன், உரத்த சிந்தனை அப்துல் சலாம், சேதுமாதவன், பாலசுப்ரமணியன், மணி, தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், பீட்டர்சன் மற்றும் பலர் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்ஞ்சலி செலுத்தினார்கள்.
திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் க.சிவகுருநாதன் வரவேற்புயாற்றி,நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.