அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திருவெறும்பூர் வின் நகர் நல சங்கத்தினர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் 39வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தேக்கத் தொட்டியின் கீழ் உள்ள நிலப் பகுதியில் வின் நகர் நலச் சங்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பும், அத்து மீறலாகவும் ஆஸ்பிட்டாஸ் கட்டிடம் கட்டப்பட்டு போர்டும் வைக்கப்பட்டு இந்த இடம் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது.
இந்த அத்துமீறல் செயலுக்கு அனுமதி வழங்கியது யார்? இது போன்ற அத்து மீறலான, ஆக்கிரமிப்பு செயலுக்கு யார் உடந்தை? இந்த விதிமீறலை அரசு அனுமதித்தால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தேக்கத் தொட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்ய முன் உதாரணமாக அமையாதா? என அப்பகுதி பொது மக்களும், சமூக ஆர்வலர்க்கும் போர்கொடி உயர்த்தி உள்ளனர்.
இந்த விதிமீறல் செயலுக்கு திருச்சி மந்திரி திறந்து வைத்ததாக கல்வெட்டும் உள்ளது.
விதிமீறல்களையும் அரசு சொத்துகளை முறையாக காக்க வேண்டியவர்களே முறைகேடன ஆக்கிரமிப்புக்கு உடந்தையா என கேள்வி எழுத்துள்ளது. இதனை கண்டு கொண்டு மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டுள்ளனர் .
ஆனால் இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வேண்டும் என வின் நகர் குடி இருப்பு நல சங்கத்தினர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் கூறினார்கள் என கூறி அதிகாரியிடம் மிரட்டி அனுமதி கேட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.