திருச்சியில் தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதில் கடந்த இரண்டு நாட்களாக பெயர்ந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும் , சாலை ஓரங்களில் உள்ள மணல்களை அள்ளியும் துப்புரவு பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இது எதற்காக என விசாரித்த போது நாளை மதியம் தமிழக துணை முதல்வர் திருச்சி விமான நிலையம் வந்து துறையூர் மற்றும் மணச்சநல்லூர் பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார் . இதற்காக திருச்சி வழியாக அவரது வாகனம் செல்ல உள்ளது .
ஒரு நிமிடத்தில் இந்த சாலைகளை அவர் கடந்து சென்று விடுவார் அதற்காக இரவு பகல் பாராமல் துப்புரவு பணி மேற்கொண்டு வரப்படுகிறது என கூறினர்.
இது குறித்து சாதாரண பொது மக்கள் ஒருவரிடம் கேட்டபோது திருச்சி மாநகரில் சாலைகள் சரியா இல்லை , சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லை என மாநகராட்சியில் பலமுறை புகார் கூறினாலும் வேதா நிறுவன துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை எனக் கூறி அந்தப் பணியை பல நாட்கள் கழித்து முடிந்தால் செய்து முடிப்பார்கள்.
ஆனால் திருச்சி சாலை வழியாக ஒரு விவிஐபி கடந்து செல்ல உள்ளார் என்பதால் அந்த பகுதி சாலைகளை மட்டும் நாக்கு போட்டு நக்கியது போன்று சாலைகளை சுத்தமாக துடைத்து வைத்துள்ளது பெரும் கொடுமையாக உள்ளது என தனது வயிற்றெரிச்சலை கொட்டி தீர்த்தார் .