திருச்சி எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி ஆசிரியருக்கு அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆப் இந்தியா ஆசிரியர் விருது .
அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆசிரியர் விருது
புது தில்லி,
1974ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (National Physical Laboratory), புது தில்லியில் நிறுவப்பட்ட அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா (USI), தனது 50வது ஆண்டு விழாவை (Golden Jubilee) முன்னிட்டு ஆசிரியர் விருதை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பெறப்பட்ட ஏராளமான பரிந்துரைகளில் இருந்து, திருச்சிராப்பள்ளியில் உள்ள SRM TRP பொறியியல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியரான டாக்டர். சக்திபாண்டி அவரது அப்ளைடு அல்ட்ராசோனிக்ஸில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்விருது, ICUMSAT-2024 (International Conference on Ultrasonic and Advanced Technology) மாநாட்டின் தொடக்க விழாவில், அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் முன்னாள் துணைவேந்தர், டாக்டர். ராஜா ராம் யாதவ் அவர்களால் தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் டாக்டர். ஆர். சிவகுமார் மற்றும் கல்லூரி முதல்வர், டாக்டர். சக்திபாண்டி அவர்களை வாழ்த்தி, அவரது அல்ட்ராசோனிக்ஸ் துறையின் முன்னேற்றத்திற்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பெற்ற முக்கியமான சாதனைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இவ்விருது, அல்ட்ராசோனிக்ஸ் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் டாக்டர். சக்திபாண்டி அவர்கள் மைல் கல்லாக இருந்து, எதிர்கால மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.