Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

0

 

திருச்சியில்
65 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள மளிகை கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதனை அடுத்து 65 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடுபகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் சுடலை மணி (வயது34) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கந்தவேல் , இப்ராஹிம், மகாதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.