Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: திமுகவினரிடம் ரெய்டு வராத காரணம் கறை படாத கரங்கள் அல்ல கப்பம் சரியாக கட்டுவதே என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

0

 

திமுகவினரிடம் ரெய்டு வராத காரணம் கறை படாத கரங்கள் அல்ல கப்பம் சரியாக கட்டுவதே என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:

“வ.உ.சி. கப்பலொட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.

திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

வல்லபாய் பட்டேலை தூக்கி பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர்.

ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆய்வுக்கு செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா?

த.வெ.க. – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான்.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாது கரம் என்பதல்ல, கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார்.

திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.