ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ் பி நடவடிக்கை எடுப்பாரா? என் எஸ் பி ரோடு தரைக்கடை வியாபாரிகள் புலம்பல் .
திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் தெரிவித்து இருந்தனர்.
இதனை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் என்.எஸ்.பி ரோட்டில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரி ஒருவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்தினர்.
பின்னர், தரைக்கடை வியாபாரிகள் தரையில் அமர்ந்து தரைக் கடை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே! என்று வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலுவை கைது செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்
.
மேலும் தரை கடை வியாபாரி ஒருவர் கூறும்போது தீபாவளி நேரத்தில் எங்களைப் போன்ற அன்றாடம் காட்சிகளை வெயில் மழை பாராமல் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையில் அமர்ந்து உழைத்தால் தான் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சாப்பிட முடியும் . ஆனால் எங்கள் கடைகளை அகற்றக்கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லி சாரதாஸ் மங்கள் & மங்கள் போன்ற கடை முதலாளிகளிடம் பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு எதிராக செயல்படுகிறார் கோவிந்தராஜு .
நீ காந்தி மார்க்கெட் போன்ற மெயினான பகுதிகளில் உள்ள கடைகளை சிறு வியாபாரிகள் பெற்றால் அவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் , வாழைக்காய் மண்டியில் உள்ள வியாபாரிகளிடம் மீட்டர் வட்டியில் ( காலையில் 10 ஆயிரம் கொடுத்தால் மாலையில் 11 ஆயிரம் அவருக்கு தர வேண்டும் ) இப்படி பல பேர் வயிற்று அடித்து சம்பாதிக்கும் அவருக்கு எங்கள் நிலை எப்படி தெரியும் . ஒரு காலத்தில் புதுக்கோட்டை சாலையில் உள்ள அபிராமி வீடியோஸ் என்ற அவரது அண்ணன் கடையில் டீ குடிக்க ஐந்து ரூபாய் கேட்டு கையேந்தி நின்ற அவருக்கு இன்று இத்தனை கோடிக்கு அதிபதி ஆனது எப்படி ?
கட்டுப்பஞ்சாயத்து, அதிக வட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது ஆப்ரேஷன் அகழி என்ற முறையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் திருச்சி எஸ் பி ஐயா இவரது வீட்டில் ரைடு செய்தால் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளிடம் மிரட்டி வாங்கப்பட்ட கடைகள் பத்திரங்கள் மூட்டை கணக்கில் சிக்கும் என்பது உறுதி மிக வருத்தத்துடன் கூறினார் .
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.