தொடர்ந்து மக்கள் பணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினார்.
உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
நீர்நிலையில் இருந்து குறைந்தபட்சம் 15 மீட்டருக்குள் எந்த கட்டிடமும் கட்டப்படக்கூடாது என்கின்ற விதியை காற்றில் பறக்க விட்டு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை உடனடியாக நிறுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி , திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் அறிவுறுத்தலின்படி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதியன்று (30.09.2024) மாவட்ட ஆட்சியரிடம் (TN/WRD/TRY/I/COLLMGDP/30SEP24/10282575) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, தில்லைநகர் பகுதி செயலாளர் S. கருப்பையா, உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ், நிர்வாகிகள் N.S. தருண், கல்லணை M.L.குணா, கைலாஷ் ராகவேந்திரா, 26-வது வட்ட செயலாளர் சேது கார்த்திக் ஆகியோர் மனு அளித்தனர்.
அதேபோல், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு வரும் இடத்தைப் பற்றி, மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 30.09.2024 அன்று மனு அளிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, நில அளவை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வாயிலாக { கோ.14/உ.பொ ( திருச்சி) /ஆ. பா. பிரிவு/2024/23.10.2024 } வட்டாட்சியர், திருச்சி மேற்கு வட்டம் அவர்களுக்கு படிவம் 1- ல் உரிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்கள் கிடைக்க பெற்றவுடன், உண்மை தன்மையை ஆராய்ந்து, நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்ற விபரம், கடிதம் வாயிலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.