Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி அடிக்க எடப்பாடி பழனிச்சாமி வியூகம் அமைத்து வருகிறார் . திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ரத்தினவேல் பேச்சு .

0

 

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும்
எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.ஆட்சி
அமைய நாம் பாடுபட வேண்டும்

திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு.

திருச்சி புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.புத்தூர் பகுதி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,
மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசும் பொழுது இளைஞர்கள் கட்சியில் சேர தொடங்கி விட்டனர். இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே திமுகவை விட அதிமுக பெரிய கட்சி. மக்களை தொடர்ந்து சந்திப்போம். சட்டமன்ற தேர்தலுக்கு 500 நாட்கள் தான் இருக்கிறது. நாம் பூத் கமிட்டியை வலுப்படுத்துவோம்.அதிமுகவில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சிக்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தினமும் பொதுமக்களை சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்து அதனை நம்முடைய முயற்சியால் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் பேசியதாவது:-
அதிமுகவை இன்றைக்கு உயிரோட்டமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் யார்? என்பதற்கு நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தோற்று விட்டால் அதன் பிறகு வெற்றி பெறாதது என்பது அர்த்தம் அல்ல. சில தேர்தல்களில் முதலில் தோற்று விட்டு பிறகு சரித்திர சாதனை, வரலாற்று படைத்து இருக்கிறது அதிமுக. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் தோல்வியை தழுவி வந்த திமுக இன்றைக்கு ஆட்சி கட்டிலில் அமரும் போது அதிமுக ஆட்சிக்கு வராதா? ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் வெற்று இடம் உள்ளதாக எதிர்கட்சிகள் கூறினார்கள். ஆனால் அதனை வெற்றிடமாக எடப்பாடியார் மாற்றி காட்டினார்.
எடப்பாடி விஸ்வரூபம் எடுத்துள்ளார். திமுக கூட்டணியில் வெளியேற கட்சிகள் காரணம் கண்டுபிடித்து வருகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி அடிக்க எடப்பாடி பழனிச்சாமி வியுகம் அமைத்து வெற்றி பாதை அமைத்து தருவார். அதிமுக தனித்தன்மை உள்ள கட்சி. திமுகவிற்கு தனியாக இருக்க தெம்பு கிடையாது.எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியில் அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இலக்கிய அணி பாலாஜி, மகளிர் அணி நசீமா பாரிக், கலை பிரிவு ஜான் எட்வர்டு,ஐ.டி பிரிவு வெங்கட் பிரபு, தென்னூர் அப்பாஸ்,பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர் முஸ்தபா,நிர்வாகிகள்
டி ஆர். சுரேஷ் குமார்,ரஜினிகாந்த்,ரமணிலால்,எம்.ஜே.பி. வெஸ்லி, வண்ணாரப்பேட்டை
ராஜன்,உறையூர் சாதிக்,உயர் கொண்டான் திருமலை தினேஷ்,
பி.எம்.குமார், பாலையா,
குருமூர்த்தி, ரவிச்சந்திரன், இளஞ்சியம், சுரேஷ்குமார், வெல்லமண்டி கன்னியப்பன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,ஐ.டி நாகராஜ், புத்தூர் பாலு, நாட்ஸ் சொக்கலிங்கம், சதீஷ் குமார், அரவனூர் பன்னீர்செல்வம், சிந்தை ராமசந்திரன், உறந்தை முத்தைய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.