திருச்சி கல்லுக்குழி
ஆஞ்சநேயர் கோவிலில் ஏக தின இலட்சார்ச்சனை விழா இன்று நடைபெற்றது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 3 -வது சனிக்கிழமை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது .
காலை 8:30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இரவு 8.05மணிக்கு இலட்சார்ச்சனை நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மகா தீபாதாரனை நடக்கிறது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுந்தரி, செயல் அலுவலர் பொன் மாரிமுத்து மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.