Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மனிதநேய அனைத்து வர்த்தகம் நல சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டரிடம் மனு .

0

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் .

அம்மனுவில்
மனிதநேய மக்கள் நல சங்கத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தரக்கடை வியாபாரிகள் உறுப்பினராக இருந்து வருகின்றனர். இவர்கள் மலைக்கோட்டை வீதியை சுற்றி உள்ள பகுதிகளான என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், தென்கரை, தெப்பக்குளம் ஆர்ச், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் வளைவு ஆர்ச், போன்ற பகுதியில் 25 வருடங்களுக்கு மேலாக தர கடை தள்ளு வண்டி அமைத்து கால் மிதியடி பனியன் ஜட்டி சோப்பு, சீப்பு ஃபேன்சி பொருட்கள் ரெடிமேட் வியாபாரம் மற்றும் உணவு பொருட்கள் என நூடுல்ஸ் இட்லி போன்ற தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரும் நிறுவனங்களின் தூண்டுதலின் பெயரில் தரைக்கடைகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அப்புறப்படுத்த போவதாக தொடர்ச்சியாக பத்திரிக்கை வாயிலாக வரும் செய்திகள்வியாபாரிகளை அச்சமடைய. செய்துள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் வாழ்வாரத்தை நம்பிஉள்ள இந்த கடைகளை பாதிக்காமல்வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

மேலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிங்கார தோப்பில் இருக்கும் யானை குளம் என்ற இடத்தை எங்களது சங்கத்தில் உள்ள தரக்கடை வியாபரிகளுக்கு முழுமையாக கடைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.