Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதவாதத்தை யார் தூண்டினாலும் அதுவே அவர்களுக்கு எதிராக அமையும் . திருச்சியில் தமிமுன் அன்சாரி பேட்டி

0

 

மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் பேட்டி.

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொள்கையை அமல்படுத்த ஒன்றிய அமைச்சரவை நேற்று முன்தினம் முடிவு செய்துள்ளது
இந்திய ஜனநாயகத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தோடு முடிவெடுக்கும் விஷயங்களில் இதை ஒன்றாக பார்க்கிறேன்
இது ஏற்கத்தக்கதல்ல.
அதிபர் பாணி ஆட்சியை முன்னிறுத்தும் முயற்சியாக கருதுகிறோம் அதற்கு அடுத்தபடியாக நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி முறையில் கை வைப்பார்கள். மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மாநகராட்சி ஆக மாற்றி விடுவார்கள்..

இந்திய மற்றும் இலங்கை கடற்பரப்புக்கு இடையே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது
மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றுவது போன்றவை தொடர்வதால் உள்நாட்டு மீன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்
கைதான மீனவர்களை அந்த நாட்டின் நீதிமன்றத்தில ஆஜர் படுத்தி அபராதம் விதித்ததில்
தவறில்லை.
நம் மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பி உள்ளது மனித உரிமை மீறல்.
குஜராத் மீனவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் இந்திய அரசு பொறுத்துக் கொண்டிருக்குமா ஆகவே இலங்கையை தூதரை அழைத்து ஒன்றிய அரசு கண்டறத்தை பதிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி படி ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராக தகுதி உள்ளது அந்த முடிவை திமுக எடுத்தால் நாங்கள் வரவேற்போம்.
தமிழகத்தில் பெரியாரைத் தவிர்த்து அரசியல் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை உணர்ந்துள்ள நடிகர் விஜயை பாராட்டுகிறேன்.. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வக்பு வாரிய தலைவர் பதவியை கொடுப்பது சிறந்தது. இதனால்,அரசியல் கட்சிகளின் தலையீடு,நெருக்கடி,நிர்ப்பந்தம் இல்லாமல் சுயமாக செயல்பட வழிஏற்படும்.
வக்பு வாரிய சொத்துக்களில் இருந்து வாடகை வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக, அரசிடம் நிதி உதவி கேட்க வேண்டிய தேவை ஏற்படாது.

உண்மைக்கு மாறாக பேசுவதை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. அவர்கள் மதவெறி அரசியல் செய்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மத வேறுபாடு இல்லாமல் குடும்ப உறவுகளாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். மதவாதத்தை யார் தூண்டினாலும், அதுவே அவர்களுக்கு எதிராக அமையும்.
நாட்டின் வளர்ச்சிக்கு மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஷெரீப்,மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் அவை தலைவர் ஷேக் தாவூத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.