Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீட்டு விளையாடிய நபரிடம் பறிமுதல் செய்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் ரூ.2 லட்ச ரூபாயை ஆட்டைய போட்ட எஸ் ஐ. திருச்சி எஸ்பி அதிரடி நடவடிக்கை

0

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் கடந்த வாரம் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீசார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சோதனையின் போது, சீட்டு விளையாடிய ஒருவரின் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் அவரின் காரில் இருந்த, 2 லட்சம் ரூபாயை, எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ., வினோத் எடுத்துள்ளார். அதை பறிமுதல் செய்த கணக்கில் காட்டாமல் தானே வைத்துக் கொண்டார்.
வாட்சையும், பணத்தையும் பறிகொடுத்தவர் லால்குடி இன்ஸ்பெக்டரிடம் முறையிட, அவர் நடத்திய விசாரணையில், தனிப்படை எஸ்.ஐ., வினோத், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் 2 லட்சம் ரூபாயை தானே வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது .தகவல் அறிந்த திருச்சி எஸ்.பி., வருண்குமார், வாட்ச் மற்றும் பணத்தை ஆட்டை போட்ட தனிப்படை எஸ்.ஐ., வினோத், போலீசார் சுசீந்திரன், பிரபு ஆகியோரை, ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
ஏற்கனவே எஸ்.ஐ., வினோத் துவரங்குறிச்சியில் பணியாற்றிய போது, பறிமுதல் செய்த பணத்தை ஆட்டை போட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். சீட்டாட்டம் நடத்த உறுதுணையாக இருந்து, சீட்டாடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, பணம் பெற்று வந்த, லால்குடி எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு மோகன் என்பவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.இவர் ஏற்கனவே, லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் பல தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.