திருச்சி ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜனதா தளம் இருந்த இடம் தெரியாமல் அழிவு பாதையை நோக்கி செல்வதாக மூத்த நிர்வாகி வையாபுரி குற்றச்சாட்டு .
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்ட தலைவராக மறைந்த ஹேமநாதன் மற்றும் வையாபுரி ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வந்தனர்.
ஹேமநாதன் மற்றும் வையாபுரியின் முயற்சியால் திருச்சியில் ஐக்கிய ஜனதாம் அலுவலகம் திறக்கப்பட்டது .
இந்த திறப்பு விழாவில் காமராஜர் இரு குழந்தைகளுடன் கூடிய திருவுருவ சிலை அமைக்கப்பட்டது.
இதன் மாவட்ட அலுவலக திறப்பு விழா, கருத்தரங்கம், பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா 2009ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது .
இவை இன்றி மாநில நிர்வாக குழு , மாவட்ட செயற்குழு ஆகியவை மாநில தலைமையில் எந்த ஒரு உதவியும் இன்றி மாவட்ட நிர்வாகத்தின் செலவில் முடிக்கப்பட்டது .
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவி விலகியவுடன் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார் ஹேமநாதன்.
தற்போதைய மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் மூலம் தனி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
இதன் பின் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தேசிய ஜனதா தள மாணவரணி இணை செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் பெண்களைக் கொண்ட வாக்கு முகவர்கள் வாக்கு எண்ணிக்கை ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது .
முதல் முதலில் ஒரு வாக்காளருக்கு பெண்கள் மட்டுமே கொண்ட முகவர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டது மற்ற கட்சி அரசியல்வாதிகளையும், தேர்தல் அதிகாரிகள், அலுவலர்களையும் மற்றும் பொது மக்களையும் பெரிதும் பாராட்டப்பட்டது . அன்றைய தினம் அனைத்து பத்திரிகைகளிலும் இது செய்தியாக வெளியிடப்பட்டது .
ஜனதா தள கட்சியின் மாநில உட்கட்சித் தேர்தல் திருச்சி பாலக்கரை அருகில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் மிக பிரம்மாண்டமாகவும், அமைதியாகவும் நடைபெற்றது .
திருச்சியில் மட்டும் பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிக அளவில் ஆர்ப்பாட்டங்களும்,போராட்டங்களும் நடத்தப்பட்டது .
இதனால் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜனதா தளம் சிறப்பாக செயல்பட்டது .
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வையாபுரி உயர் நீதிமன்றங்களில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக பல வழக்குகள் தொடர்ந்து ஆதரவாக தீர்ப்புகள் பெறப்பட்டு அரசு உத்தரவுகளாக பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பல மதுக்கடைகள் இவர் தொடர்ந்து வழக்குக்கு பின் மூடப்பட்டது . இதேபோல் டாஸ்மாக் ஊழியர்கள் பணி பாதுகாப்புக்கும் வழக்குகள் தொடரப்பட்டு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தொடங்கப்பட்ட லோக் தந்திரி ஜனதா தளம் கட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முந்தைய நிர்வாகிகள் யாரையும் அழைப்பது கிடையாது. ஏன் அவர்களை மதிப்பது கூட கிடையாது. இதனால் தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வது குறைந்து வருகிறது .
தற்போது ஐக்கிய ஜனதா தளம் , லோக் தந்திரி ஜனதா தளம் முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் உறுப்பினர்களை ஒருங்கிணைக்க முடியாமல், புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கவும் முடியாமல் கட்சியை அழித்து வருகின்றனர் தற்போதைய நிர்வாகிகள் .
அனைவரும் பங்கெடுத்து, ஒருங்கிணைந்து வளர்த்த கட்சி தற்போது ஒரு சிலரின் கைப்பாவையாக மாறிவிட்டதால் தான் இந்த நிலை என கூறி வருத்தப்படுகிறார் முன்னாள் மாவட்ட தலைவர் வையாபுரி .
இதே நிலை தொடர்ந்தால் ஐக்கிய ஜனதா தளம், லோக் தந்திரிக் ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் தமிழகத்தில் தடம் தெரியாமல் அழிந்து விடும் என மூத்த நிர்வாகிகள் மற்றும் காமராஜ் தொண்டர்கள் கவலை தெரிவித்து உள்ளனர் .