திருச்சி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று சிறப்பாக கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவ சிலை இல்லாத இடங்களில் திருவுருவ படங்களுக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை சிறப்பாக கொண்டாடினர்.
திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் அல்லித்துறை மற்றும் முசிறி கைகாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி , தலைமைக் கழக செயலாளர் மனோகரன், சிறுவன் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் , ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி , மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.