அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை பொன்விழா . அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது .
அண்ணாவின் 116-வது பிறந்தநாள் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் பொன்விழா.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல் வளாகத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர் திருவுருவச்சிலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
அண்ணா தொழிற்சங்க பேரவை பொன்விழா தொடக்க விழாவை முன்னிட்டு திருவெறும்பூர் பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி தொழிற்சங்க தோழர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
மேலும் அண்ணா ஆட்டோ ஓட்டும் தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்குமாவட்ட செயலாளர் ப.குமார் சீறுடை வழங்கினா்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைதலைவர் அருனகிரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட துனைசெயலாளர் சுபத்திரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் இராவணன், S.K.D.கார்த்திக், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், தண்டபானி, பாலசுப்பிரமணியன், நகரகழக செயலாளர் S.P.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், அணிசெயலாளர்கள் இராஜமணிகண்டன், இராஜா, பெல் அண்ணா தொழிற்சங்க தலைவர் வில்லியம் பீட்டர், நிர்வாகிகள்,பெல் அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ, போக்குவரத்து, சுமைதூக்கும் தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் எழுச்சி உடன் கலந்துகொண்டார்கள்.