திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி 95ம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்.
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள பொன்னையா மேல்நிலைப்பள்ளி , சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் சென்ட் அந்தோணிஸ் எலிமெண்டரி பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற 95 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற துணை ஜெய் ஹனுமான் ஜெ.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார் .
திருச்சி பாலக்கரை பகுதி அமைந்துள்ள பொன்னையா மேல்நிலைப் பள்ளியின் 95 ஆம் ஆண்டு விளையாட்டு தினம் இன்று பள்ளி மைதானத்தில் பள்ளியின் தலைவர் பாதிரியார் பிலிப் மேத்யூ தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்னி மைதானத்தில் உள்ள தேசிய கொடியை ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளின் மரியாதை அணி வகுப்பு ஏற்றுக் கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் இடையே சிறப்புரை ஆற்றினார் .
நிகழ்ச்சிக்கு பின் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
லைப் ஸ்டைல் ஆப்டிகல் உரிமையாளர் சித்திக் நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் .
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.