பிஜேபியுடன் கள்ள உறவு வைத்திருப்பது திமுக தான் – கருணாநிதி நாணய வெளியீடே அதற்கு சான்று – அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பேச்சு.
பிஜேபியுடன் கள்ள உறவு வைத்திருப்பது திமுக தான் – கருணாநிதி நாணய வெளியீடே அதற்கு சான்று – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பேச்சு.
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதி, பூவாளூர், அய்யனார் கோவில் அருகில், பேரூர் கழக செயலாளர் ஜெயசீலன் ஏற்பாட்டில் உறுப்பினர்களுக்கு அதிமுக உரிமை அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், புதிய கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை, கழக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்.
பிஜேபியுடன் கள்ள உறவு வைத்திருப்பது அதிமுக என ஸ்டாலின் கூறினார்..
ஆனால் கருணாநிதி நாணயம் வெளியீட்டிற்காக விளம்பரம் செய்தது தமிழக அரசு, ஆனால் இது மத்திய அரசு விழா எனக் கூறிக்கொண்டு, பிஜேபியுடன் கள்ள உறவு வைத்திருப்பது திமுக தான்.
திமுக வாக்குறுதிக்கு அப்பாற்பட்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி இருக்கிறார்.
அதிமுக பிஜேபியுடன் கூட்டணி எனக் கூறிக்கொண்டும், அதிமுக பிஜேபியுடன் கள்ள உறவில் இருக்கிறது என கூறிக்கொண்டும் பிஜேபி வரக்கூடாது என சிறுபான்மை மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய ஸ்டாலின், இப்போது பிஜேபி உடன் கள்ள உறவில் இருக்கிறார்.
அதற்கு கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவே சான்று.
மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யை எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என ஸ்டாலின் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
எனவே சிறுபான்மையினருக்கு இது குறித்த விழிப்புணர்வை அதிமுக தொண்டர்களான நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில், லால்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சூப்பர் நடேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.டி.எல். டோமினிக் அமல்ராஜ், கழக பொதுக்குழு உறுப்பினர் ஐ. விஜயா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் வி. பிரசன்னகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் கே.டி.எஸ். முத்துகுமார், பேரூர் கழக அவைத்தலைவர் வி. வெங்கடாசலம், வார்டு கழக செயலாளர்கள் கே. சுரேஷ், பி. சிட்டிபாபு, கே. மகாமுனி, நிர்வாகிகள் எம்.பி. சக்திவேல், பொறியாளர் ராஜா, எஸ். ஆனந்த், எஸ். சிற்றம்பலம், ஆர். அறிவழகன், எம். சுப்பிரமணியன், எஸ். செல்வராஜ், ஏ. ஜோக்கின், கே. செந்தில்குமார், மஞ்சுளா செல்வம், எஸ். சௌந்தரராஜன், வி. பார்த்திபன், சிவசண்முகசுந்தரம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.