திருச்சியில் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அமைச்சர் நேருவின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமே. புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி பேட்டி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கிராம மக்களும் தங்கள் ஊராட்சி பகுதியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என மனு அளிக்க திரண்டு வந்து இருந்தனர்.
இதேபோன்று புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து புங்கனூர் ஊராட்சி மன்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக் தலைமையில் பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .
ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி கூறுகையில் :- புங்கனூர் ஊராட்சியில் 1000 ஏக்கருக்கு மேல் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன, இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
விவசாய நிலம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து வாழ்கின்றனர்.
மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது .
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். வரி உயர்ந்து எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
உறுப்பினர்கள் மட்டும் மாணவிச்சந்திரன் இணைக்க ஒப்பந்தம் அளித்து கையெழுத்து போட்டுள்ளதாக கூறியுள்ளனர். 3000 பேர் வாழும் எங்கள் கிராமத்தில் 10 பேர் அனுமதி அளித்தால் போதுமா ? அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டியது அவசியம் .
எங்கள் ஊராட்சியில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் கேர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது இதனை தரம் உயர்தவும் , இதன் மூலம் பல தனிப்பட்ட லாபங்களுக்காகவே அமைச்சர் நேரு இந்தத் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார் .( கேர் கல்லூரி வரை மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக உள்ளது )
ஆகவே புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.