திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தற்செயல் விடுமுறை பெற்றதன் அனுமதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வரும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க சென்றார்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.
இதில் ராஜ்மோகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராஜ்மோகன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடல் கேரளா மாநிலம் பாளையம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது.
இறந்த ராஜ்மோகனுக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.