நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர்.
இதனை அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட பொக்லின் வானத்தை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர் . இதனைத் தொடர்ந்து காலவாய் ரவி மற்றும் முத்துக்குமார் ஆகியோரை 303 பிரிவின் கீழ் கைது செய்தனர் .
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வடிவு என்கிற கல்வராயனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .
பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க வந்ததை பார்த்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினரை பாராட்டும் சமூக ஆர்வலர்கள் எப்போதும் இதுபோன்று காவல்துறையினர் இதுபோன்று செயல்படும் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் .