சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்.
முசிறி வட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்டக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றினார் .
கல்வியின் மூலமே வல்லரசு இந்தியாவை உருவாக்க முடியும் எனவே திறம்பட கல்வி கற்று சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
கல்விக் குழு உறுப்பினர் நல்லாசிரியர் ராதாகிருஷ்ணன் தனது சிறப்புரையில் கல்வியையும் ஒழுக்கத்தையும் மாணவர்கள் உயிரெனப் போற்ற வேண்டும் என்றும் சிறந்த இலக்கைத் தீர்மானித்து சீரிய முறையில் நடை போட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து
அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் சிவகாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், பூமி உடையார், முத்துசாமி,
செல்லபாப்பு கோவிந்தராஜ்,ரகு, திசார்த், விஷ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 80 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.போதைப் பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் அக்க்ஷதா, பிரதோஷ், திவ்ய நிலவன் ஆகியோரின் சிலம்பம் மற்றும் கராத்தே அனைவரின் பாராட்டையும் பெற்றது. சிறப்பு மிகுந்த இவ்விழாவினை பள்ளியின் ஆசிரியர்கள் சித்ரா, தண்டபாணி, தேவசுந்தரி,நிர்மலா ,சத்தியா, சரவணன் ,
லட்சுமணன்,சேதுநாராயணன் (ஆ.உ)
ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பித்தனர். முன்னாள் மாணவர்களும் ஊர்ப்பொதுமக்களும் பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளி முழுமையும் வண்ணத் தோரணங்களாலும் வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் பெற்றோர்களும் ஊர்ப் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.