நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் .
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையை எதிர்த்து அடிமை விலங்கை ஒடித்து பெற்ற சுதந்திரம். பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்து பெற்ற சுதந்திரம். அண்ணல் மகாத்மா காந்தி, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், ஜவஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், போன்ற அரும்பெரும் தலைவர்கள் பெற்று தந்த சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாத்திட . இஸ்லாமிய மக்களின் இருப்பை உறுதி செய்திட பாடுபாடும் இந்தியா கூட்டணி தலைவர்களின் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அணிதிரள்வோம். சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற சூளுறை மேற்கொள்வோம் என்று தெரிவித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் .