திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் இரண்டு நாள் நடைபெறும் தடகளப் போட்டியில் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில்
திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள போட்டிகள் இன்று தொடங்கியது .
திருச்சி மாவட்ட தடகள சங்கம்,
ஸ்டேட் பேங்க் (லேட்) S. மோகன் நினைவு சுழற்கோப்பை 2024
இணைந்து வழங்குபவர்கள் நியூரோ ஒன், பனானா லீப் & அற்புத பவன் ,
இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில்
திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி..ராஜு வரவேற்புரையாற்றினார்.
திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச. ரவிசங்கர், துணை செயலாளர் எம்.கனகராஜ், துணை செயலாளர் எம். ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.கண்ணன் முதல் நாள் விழாவை தொடங்கி வைத்தார்.
பொன்மலை காவல் ஆய்வாளர் திருநானந்தம் மாவட்ட தடகள சங்க கொடி ஏற்றி வீரர்களுக்கு வாழ்த்துரையுடன் , வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ்யுடன் நினைவு பரிசுகள் வழங்கினார்.
இன்று விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, மற்றும், 18, 20 வயதுக்கான 100 மீ. 200 மீI 400 மீ , 800 மீ, 1500 மீ 5000 மீ ,குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.
இதில் சுமார் 2000 பேருக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இரண்டாம் நாள் போட்டி 10. 08.24 நாளை தொடங்கி மாலை 5.00 மணியளவில் பரிசளிப்பு நடைப் பெறும் என திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு தெரிவித்துள்ளார்