திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜகபர் அலி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் அவலத்தை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :-
சிங்கப்பூரில் இருந்து ஊர் வந்த என் மாமாவை திருச்சி ஏர்போர்ட்டுக்கு செவ்வாய் அன்று (30.7.24) மதியம் 1.30 மணிக்கு அழைக்க சென்று இருந்தேன். ஏர்போர்ட் உள்ளே செல்வதற்கு கார் என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுத்து சென்றேன்.
ஏர்போர்ட் உள்ளே கார் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை கார் பார்க்கிங் உள்ள இடத்தில் வண்டியை நிறுத்தவும் என்று செக்யூரிட்டி சொன்னதால் கார் பார்க்கிங் இடத்தில் நிறுத்தினேன் .
பின் 2.15 மணிக்கு வெளியில் வரும் பொழுது கார் பார்க்கிங் செய்த இடத்தில் ரூ.130
செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டேன். இங்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானால் 500 ரூபாய் வரை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே வந்து வண்டியை எடுத்தேன் .😭
மீண்டும் கார் கடைசியில் வெளியாகும் பொழுது 80 ரூபாய் கேட்டில் கேட்கிறார்கள் ஏன் என்று கேட்டேன் அது கார் பார்க்கிங் உள்ள இடம் இங்கே வெளியேறுவதற்கு தனியாக 80 ரூபாய் செலுத்தி தான் ஆக வேண்டும் என்று கூறினார்கள். இரு முறை பணம் கட்ட வேண்டி உள்ளதால் நானும் காரை நிறுத்திவிட்டு இப்பொழுதுதான் ரூ.130 கட்டினேன் மீண்டும் கட்டுவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் இந்திக்காரன் தமிழ் தெரியாது என கூறினார்கள்.( வேண்டுமென்றே அங்கு தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துவது இல்லை ) நானும் இந்தியிலேயே பேசி போலீசை கூப்பிடு இந்த இடத்தை விட்டு காரை எடுக்க மாட்டேன் என்று தகராறு செய்தேன் 10 நிமிடம் மேலாக காத்திருந்தும் எந்த பயனும் இல்லை.
எனக்கு பின்னால் கார் அதிகம் டிராபிக் ஜாமானதால் உடன் ரூ.80 கட்டி வெளியேறினேன்.
ஆகையால் இனி வரும் காலங்களில் ஏர்போர்ட் செல்பவர்கள் ஏர்போர்ட் வெளியேறும் இடத்திலேயே காரை நிறுத்தவும் கார் பார்க்கிங் உள்ள இடத்தில் நிறுத்த வேண்டாம். இது பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி என அவர் கூறியுள்ளார்.
மேலும் எதற்காக இரண்டு இடத்தில் வசூல் செய்கிறார்கள், தமிழர்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் தமிழ் தெரியாத இந்தி மட்டுமே தெரிந்த நபர்களை பணியில் அமர்த்துவது ஏன் என தெரிவுபடுத்துவாரா விமான நிலைய இயக்குனர் என கூறியுள்ளார்.