தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி கலெக்டரிடம் சிறுமி பரபரப்பு புகார்.
தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும்
பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி
கலெக்டரிடம் சிறுமி பரபரப்பு புகார்.
திருச்சி குண்டூர் பகுதியில் தனது அப்பா மற்றும் அக்காள் கணவரின் நண்பர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 16 வயது சிறுமி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தங்கவைத்து, விசாரணை நடத்திவருகிறார்கள்.
இந்த விசாரணையின் போது, முன்னதாக தான் இது குறித்து கொடுத்த புகாரின் மீது, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், என்னை நேரில் ஒருமுறை கூட நேரில் பார்க்காத, அரசு பெண் மருத்துவர் ஒருவர் எனது உடல்நிலை குறித்து சான்று வழங்கியுள்ளார் எனவும் அந்த சிறுமி குற்றம்சாட்டிள்ளார்.