Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியன் ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே உடன்படிக்கை .

0

NNSTORM-X-ன் அறிமுகம் மற்றும் சென்னை சர்வதேச வட்டத்தில்
இந்திய தேசிய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில் இந்தியன்ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையேயான உடன்படிக்கை

நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான இந்தியன்ஆயில் நிறுவனம், சென்னை சர்வதேச வட்டத்தில், இந்திய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில், ஓட்டப் பந்தய கார்களுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் அளவில் ஓக்ட்டேன் கொண்ட ஓட்டப் பந்தய எரிபொருள் ஆன STORM-X என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தனிச்சிறப்பு மிக்க வேளையில், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) உடனான தனித்துவம் வாய்ந்த உடன்படிக்கை கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், இந்தியன்ஆயில் இயக்குநர் (வர்த்தகம்) V. சதீஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து STORM-X பிராண்டின் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். இந்தியன்ஆயில் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) அலோக் சர்மா அவர்களும் MMSCயின் தலைவர் அஜித் தாமஸ், செயலர் பிரபா சங்கர், துணைத் தலைவர் விக்கி சந்தோக்கே உள்ளிட்ட MMSCயின் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டுறவு மூலமாக முக்கியமாக ஒரு மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளது எனலாம். ஏனெனில், இந்தியன்ஆயில் நிறுவனம், இந்திய தேசிய ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப்கள் (INRC) நடைபெறும் சமயங்களில் ஓட்டப் பந்தய எரிபொருள்களையும் லூப்ரிகன்ட்களை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் அவை நடைபெறும் இடத்திற்கும் வாகனங்களுக்கும் பிராண்டிங் என்பதை வழங்கிடும்.

உயர் தரம் கொண்ட எரிபொருள்களையும் லூப்ரிகன்ட்களையும் வழங்குவதில் முன்னணி வகித்து வருகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்தியவையாவன – நாட்டின் முதல் ஓக்ட்டேன் எரிபொருள் – XP100, மிக குறைந்த உமிழ்வைத் தந்து எரிபொருள் செயல்திறனைத் தரும் XTRAGREEN டீசல். மேலும் எங்கள் தயாரிப்புகளில் அடங்குபவை – ப்ளக்ஸ் ப்யூவல் வண்டிகளுக்கான எத்தனால் 100 மற்றும் நிலைத்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த கரியமில வாயு உமிழ்வு உடைய க்ரீன் லூப்ரிகன்ட்கள்.

‘இந்தியன்ஆயில், வரலாற்று ரீதியாக, மோட்டார் விளையாட்டுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தொடக்கத்திலிருந்தே அளித்து வந்துள்ளது என்பதை MOTOGP பாரத் 2023ல் டைட்டில் ஸ்பான்சர் ஆக இருந்துள்ளதும் ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் தருணத்தில் என்கிற ARRCக்காக, 2024 முதல் 2026 வரை, FIM உடன் இந்தியன்ஆயில் நிறுவனம் பார்ட்னர்ஷிப்பில் உள்ளதும் நிரூப்பிக்கும்.

மோட்டார் விளையாட்டுகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பு உணரவை மீண்டும் பறை சாற்றும் வகையில் STORM-X அறிமுகம் அமைந்துள்ளது என்று சதீஷ் குமார் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.