காலை உணவு திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் . திருச்சி இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை.
அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கையை ஏற்று காலை உணவு திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் – இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை.

இந்திய நாட்டிலேயே மக்கள் நலனுக்காக மிகச்சிறப்பாக செயல்பாடும் சிறந்த முதலமைச்சராக பணியாற்றி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நட்டின் உயர்வுக்கும் பாடுபட்டு விழித்திருக்கும் நேரமெல்லாம் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு, நாடுபோற்றும் நல்லாட்சியை புகழ்மிக்க பொற்கால ஆட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்கள் உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அற்புதமான காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தியதின் மூலம் மாணவர்கள் கல்வி கற்றிட தூண்டுகோலாக செயல்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திய மாண்புமிகு.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள 34ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் காலைப்பசி, கடும்பசி என்ற பசிப்பிணியை போக்கி கல்வி வளர்ச்சியில் இந்திய நாட்டிற்கே முன்னுதாரணமாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை காலை உணவு திட்டத்திற்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கையை ஏற்று முதல்வரின் பெயரை சூட்ட வேண்டும் என முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .