போதை வஸ்துகள் விற்பனை, கள்ளச்சாரய மரணங்கள்: இவற்றை தடுக்க தவறிய திமுக அரசை பற்றி பொதுமக்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விழிப்புணர்வு நோட்டீஸ் .
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழகத்தில் கஞ்சா, மெத், ஓபியம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கத்திற்கு காரணமாகவும்,
கள்ளச்சாராய புழக்கத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததால் சமீபத்தில் மரக்கணத்தில் 22பேர் உயிரிழப்பு மற்றும் 79 நபர்களின் உடல்நலக்குறைவிற்கு காரணமாகவும், அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 68 நபர்களின் உயிர் இழப்பிற்கும், 224 க்கும் மேற்பட்ட நபர்கள் உடல் நலக்குறைவு போன்ற, கள்ளச்சாராய மரணங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக, இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை நகர கழகத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட விவசாய அணி செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில்,
மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சேது, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.