தமிழக மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
தமிழக மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

மினி பேருந்து வழித்தடத்தை 25 கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது, இது குறித்து ஆலோசிக்கவும் தங்கள் சங்க வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு மினி பேருந்து உரிமையாளர்கள் சமயமேளன மாநிலத் தலைவர் கொடியரசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் ரஹீம், பொருளாளர் சுப்பிரமணி . திருச்சி மாவட்ட தலைவர் சிவானந்தம், செயலாளர் அயூப் கான், துணைச் செயலாளர் ஜெகநாதன், இணை செயலாளர் ராஜசேகர், மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.