திருச்சி அருகே காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம்.10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 21) என்ற வாலிபர் வசித்து வருகிறார்.
இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.