புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி தலைமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் . சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு .
மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரதத்தில் பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை கண்டித்து முதல் நாள் உண்ணாவிரதம், நேற்று கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம்,
இன்று மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.எஸ்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று சட்டங்களும் மத்திய பாரதிய ஜனதா அரசின் பாசிச கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், பிரிட்டீஷ் காலணியாதிக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், அப்துல்கலாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, தினேஷ், சரவணன், மூத்த வக்கீல்கள் மார்ட்டின், வீரமணி, முத்துகிருஷ்ணன், ஓம் பிரகாஷ், முன்னாள் செயலாளர் வடிவேல்சாமி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட். துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, செயற்குழு உறுப்பினர் பொன் முருகேசன், வழக்கறிஞர் விக்னேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, இச்சட்டடங்கள், மக்களாட்சியின் மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாகவும், நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது. மக்கள்விரோத இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக இச்சடங்களை விவாகத்திற்கு கொண்டுவரவேண்டும். இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம், நேற்று கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம், இன்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
வருகிற 8-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் திருச்சியில் பிரம்மாண்ட முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி கோர்ட்டு எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு பேரணி உழவர் சந்தையில் முடிவடைகிறது என வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.