திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும். பணியாளர்கள் மிரட்டல் .
திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? .
இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நபர் ஸ்டெச்சரில் கொண்டு செல்ல பணியாளரை அழைத்த போது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கொண்டு செல்வேன் என்று நோயாளியின் மனைவியிடம் கறாராக பேசிய நபர்
நுழைவாயில் அழுத பெண்மணியை நேரில் டீனை பார்க்க சென்ற போது அலுவலகத்தில டீன் அருண் இல்லாத காரணத்தால் RM அவர்களிடம் புகார் தெரிவித்தும் தனது ஊழியருக்கு ஆதரவாக செயல்படுகிறார் RM.
மேலும் நோயாளியை மிரட்டுகின்றனர். மற்றவர்களிடம் புகார் சொன்னால் உனது கணவருக்கு இங்கு சிகிச்சை பார்க்க முடியாது என மிரட்டுகின்றனர்.அந்த பெண்மணி அழுது கொண்டே பிரச்சை செய்ய வேண்டாம் தம்பி எங்களால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது என அழுது புலம்பி வருகின்றனர் .
.ஏழை எளிய மக்களுக்காக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நபர்களிடம் வழிபறியை விட கேவலமான செயல்படும் ஊழியர்கள் மீதும் ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் RM மீது நடவடிக்கை எடுப்பார மாவட்ட ஆட்சியர் என திருச்சி தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா, சமூக ஆர்வலர் இலியாஸ் ஆகியோர் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர் .